உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் தனிமை – உளவியல் ஆராய்ச்சியாளரின் எச்சரிக்கை
தனிமை வாழ்க்கை உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் என உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைகழகத்தை சேர்ந்த பிராங்க் இன்பர்னா என்பவர் அமெரிக்கன் பிசியாலஜிஸ்ட் என்ற இதழில் ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், ஐரோப்பாவில் உள்ள நடுத்தர வயது உடையவர்களை விட அமெக்காவில் வாழும் நடுத்தர வயது உடையவர்கள் தங்கள் குடும்பங்களுடன் தனிமையிலேயே வாழ்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் 13 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுத்தர வயதுடையவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தரவுகளை பயன்படுத்தினோம்.
இதில்,45 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் தனிமையில் இருக்கும் அவர்களின் மாற்றங்களை கண்காணித்தோம்.
நடுத்தர வயதுடையவர் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க நடுத்தர வயதுடையவர்களுக்கு அதிக மன அழுத்த அறிகுறிகளையும், நாள்பட்ட நோய், வலி மற்றும் இயலாமையின் பாதிப்புகள் இருக்கின்றன.
தனிமையில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம்,நாள்பட்ட நோய்கள் மற்றும் முன்கூட்டியே மரணம் ஏற்பட அதிக வாய்ப்புஉள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.