IPL Match 19 – ராஜஸ்தான் அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வை செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆர்சிபி அணிக்கு முதல் ஓவரிலேயே 13 ரன்கள் கிடைத்தது.
4-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. விராட் கோலி அதிரடியாக விளையாட டு பிளிஸ்சிஸ் சற்று தடுமாறினார். ஆனால் இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.
இதனால் பவர்பிளேயில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆர்சிபி ரன் குவிப்பில் வேகம் குறைந்தது. 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் சேர்த்தது.
11-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி விராட் கோலி 39 பந்தில் அரைசதம் அடித்தார். மேலும் இந்த தொடரில் இது அவரின் 3-வது அரைசதம் ஆகும். 11.2 ஓவரில் ஆர்சிபி 100 ரன்னைத் தொட்டது.
ஆர்சிபி அணியின் ஸ்கோர் 125 ரன்னாக இருக்கும்போது 14-வது ஓவரின் கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழந்தார். 33 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் வெளியேறினார்.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 ரன் எடுத்த நிலையில் பர்கர் பந்தில் க்ளீன் போல்டானார். ஆர்சிபி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
ஒருபக்கம் விரைவாக ரன் வராத நிலையில் மறுபக்கம் விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 18-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு துரத்தி 97 ரன்களை தொட்டார். அதேவேளையில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
19-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 67 பந்தில் சதம் அடித்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 72 பந்தில் 113 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.