ஜெர்மனிக்கு காத்திருக்கும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ரஷ்யாவிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலுக்கு தயாராகுமாறு ஜெர்மனிக்கு துணைவேந்தர் ராபர்ட் ஹேபெக், வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரை விரைவாகவும் அமைதியாகவும் முடிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை இல்லை என துணைவேந்தர் ராபர்ட் ஹேபெக்கிற்கு தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அமைதிக்காக ஏங்குகிறோம். ஆனால் நேர்மையான, கசப்பான பதில் என்னவென்றால்: நாங்கள் வேறுவிதமாக விரும்பினாலும், விரைவான, நல்ல முடிவு இருக்காது, ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கருத்தில் கொண்டு, அவர் இந்த விடயங்களை வலியுறுத்தினார். “அச்சுறுத்தல் சூழ்நிலைக்கு நாம் தயாராக வேண்டும். எனவே ஜெர்மனி தனது சொந்த பாதுகாப்பில் அதிக முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
இராணுவத் தாக்குதல்களின் போது, நாங்கள், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், உட்பட நம்மை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.