இளம் உலகத் தலைவராக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவு
இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், உலகப் பொருளாதார மன்றத்தால் இளம் உலகளாவிய தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் .
இலங்கை அமைச்சர் ஒருவர் இளம் உலகத் தலைவராக தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இளம் உலகத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் அமைச்சர் என்ற பெருமையை ஜீவன் தொண்டமான் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் தொண்டமான், உலக பொருளாதார மன்றத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், குறிப்பாக இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் தொழில் முயற்சியை மேம்படுத்துவதற்கும் இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டினார்.
“இந்த அங்கீகாரம் எனது பயணத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, இலங்கை மக்களின் மன உறுதி மற்றும் மனப்பான்மைக்கு இது ஒரு சான்றாகும். மேலும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நிலையான அபிவிருத்தி மற்றும் சமத்துவத்திற்கான எங்களது பகிரப்பட்ட இலக்குகளை முன்னோக்கி செலுத்துவதற்கும் இந்த தளத்தை பயன்படுத்துவதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்” என அமைச்சர் தொண்டமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்