இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் இடம்பெயர்வு!
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் கிட்டத்தட்ட 75,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 39,900 பேர் ஆண் தொழிலாளர்கள் மற்றும் 34,599 பேர் பெண் தொழிலாளர்கள் ஆவர்.
பெரும்பாலான இலங்கையர்கள் வேலை நிமித்தம் குவைத்துக்குச் சென்றுள்ளனர் மற்றும் அவர்களின் எண்ணிக்கை 17,793 ஆகும்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை தேடும் போக்கு அதிகரித்துள்ளது.
இலங்கையில் 2,374 பேர் தென்கொரியாவுக்கும், 2,114 பேர் இஸ்ரேலுக்கும், 1,899 பேர் ருமேனியாவுக்கும், 1,947 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேலை நிமித்தம் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.