மாரடைப்பு தொடர்பில் அமெரிக்க ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவினால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, இலத்திரனியல் சிகரெட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு இதயக் கோளாறுகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி, இலத்திரனியல் சிகரெட் பாவனையாளர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.7 மில்லியன் ஆஸ்திரேலிய பெரியவர்கள் இலத்திரனியல் சிகரெட்டுகளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் வருடாந்த அமர்வுடன் இணைந்து இந்தத் தரவுகள் முன்வைக்கப்பட்டதுடன், இலத்திரனியல் சிகரெட் பயன்படுத்தும் 175,667 பேர் இதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 42 சதவீதம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னணி ஆய்வாளர் மருத்துவர் பெனே அல்ஹாசன் தெரிவித்தார்.
டிசம்பர் 2022 முதல் டிசம்பர் 2023 வரையிலான 12 மாத காலப்பகுதியில், கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் புதிதாக இலத்திரனியல் சிகரெட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.
14 முதல் 17 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 9.6 சதவீதம் பேர் இலத்திரனியல் சிகரெட்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.