ஐ.நாவில் இணைய முயற்சிக்கும் பாலஸ்தீன்!
ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு முழு உறுப்பு நாடாக இணைந்துகொள்ள பாலஸ்தீன் முயற்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு எழுத்தப்பட்ட ஒரு கடிதத்தில் UN தூதர் ரியாட் மன்சூர் “பாலஸ்தீனிய தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்” 2011 ஆம் ஆண்டுக்கு முந்தைய விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளார்.
இந்த கடிதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாலஸ்தீனியர்கள் அதை இந்த மாதம் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக சில ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)