பொழுதுபோக்கு

எப்படி இருந்த மனுசன அப்பாவும் மகளும் சேர்ந்து இப்படி ஆக்கிட்டீங்களே…

கடந்த வாரம் லோகேஷ், ஸ்ருதி ஹாசன் உடன் இணைந்து நடித்த இனிமேல் ஆல்பம் பாடல் வெளியாகியிருந்தது. அதிலிருந்தும் இவருக்குமே எழுப்பப்படும் ஒரே கேள்வி என்றால், “அது எப்படி சாத்தியமாச்சி?”.

ஏனென்றால் ஆக்சன் கிங் என்று நாம் நினைத்திருந்த லோகி அதில் ரொமாண்டிக் போயாக மாறி இருந்தார். அதிலும் ஸ்ருதி உடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

உண்மையிலேயே இந்த ரீல் ஜோடி சூப்பர் என்ற கமெண்ட்டுகளும் வந்தது. அதே சமயம் இருவருக்கும் இடையில் ஏதாவது இருக்குமோ என்ற பேச்சுக்களும் ஒரு பக்கம் புகைய தொடங்கியது.

அதற்கேற்றார் போல் ஸ்ருதியும் லோகேஷை தாறுமாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கு கூட லோகியை பிடிக்கும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில், அண்மையில் நடந்த ஐ.பி.எல் இல் சென்னை அணியின் ஆட்டத்தை பார்க்க இருவரும் தான் ஜோடி போட்டு வந்திருந்தார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க லோகேஷ் அவர் குடும்பத்தை பற்றிய கேள்விகள் கேட்டால் மட்டும் டென்ஷன் ஆகிவிடுகிறார். பத்திரிகையாளர் ஒருவர் இந்த பாடலை பார்த்து உங்க மனைவியின் ரியாக்சன் என்ன என கேட்டிருந்தார்.

உடனே டென்ஷனான லோகேஷ் பர்சனல் பத்தி வேண்டாம் என முடித்துக் கொண்டார். ஏனென்றால் இந்த பாடல் வெளிவந்த பிறகு அவர் வீட்டில் ஒரே பிரச்சனையாக இருக்கிறதாம்.

ஆக மொத்தம் நல்லா இருந்த அவருடைய குடும்பத்தில் அப்பாவும் மகளும் சேர்ந்து கும்மி அடித்து விட்டார்கள். அட பாவமே எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே என்ற பேச்சுக்களும் தற்போது சத்தம் இல்லாமல் எழுந்துள்ளது.

(Visited 17 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!