இஸ்ரேலில் போரில் பங்கேற்காத ஆண்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
இராணுவத்தில் பணியாற்றாத பல தீவிர ஆர்த்தடாக்ஸ் ஆண்களுக்கான அரசாங்க மானியங்களை நிறுத்த இஸ்ரேலின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது ஆண்கள் கட்டாயம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது.
இந்த உத்தரவை தொடர்ந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கமானது இன்னும் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
இவ்வாறான சூழ்நிலை தீவிர ஆர்த்தடாக்ஸ் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வழிவகுக்கக்கூடும். அவ்வாறு அவர்கள் வெளியேறும் பட்சத்தில் நாடு புதிய தேர்தல்களுக்கு தள்ளப்படும்.
தற்போதைய போருக்கு மத்தியில் வாக்கெடுப்பில் நெதன்யாகு கணிசமாக பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பெரும்பாலான யூத ஆண்கள் இராணுவத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும், அதைத் தொடர்ந்து பல வருட ரிசர்வ் கடமை. யூத பெண்கள் இரண்டு வருடங்கள் கட்டாயமாக சேவை செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.