பிரான்ஸில் தனிமையில் வீட்டில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பாரிஸில் எஸோன் நகரில் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினமே பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளது.
மார்ச் 23-24 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் 2 மணி அளவில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் நிலமை ஏற்கனவே கைமீறிச் சென்றிருந்தது.
வீடு முற்றாக தீக்கிரைக்குள்ளாகி 61 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)