தோனியின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் இந்த ஐபிஎல் தொடர் விளையாடி வரும் தோனியின் சாதனையை தற்போது சமன் செய்துள்ளார்.
இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் விளையாடி வரும் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் லக்னோ அணி தனது முதல் போட்டியாக ராஜஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நடைபெற்ற இந்த போட்டியில் கே.எல்.ராகுல் 44 பந்துக்கு 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த அரை சதத்தின் மூலம் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் தொடரின் அதிக 50-கும் மேல் ரன் அடித்த பட்டியலில் சிஎஸ்கே அணியின் எம்.எஸ்.தோனியை சமன் செய்துள்ளார். ஒரு பேட்சமானாக ஐபிஎல் தொடரில் அதிக அரை சதங்கள் அடித்த பட்டியலில் டேவிட் வார்னர், 60 அரை சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அதே போல ஒட்டு மொத்தமாக ஒரு பேட்சமானாக அதிக அரை சதம் அடித்த பட்டியலில் கே.எல்.ராகுல் 34 அரை சதங்களுடன், 8-வது இடத்தில் இருக்கிறார். இதை போல ஒரு விக்கெட் கீப்பராக அதிக 50+ ரன்களை அடித்த பட்டியலில், எம்.எஸ். தோனி 24 அரை சதங்களுடன் முதலிடத்தில் இருந்து வந்தார்.
தற்போது, கே.எல்.ராகுல் கடந்த 24-ம் தேதி ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் 24 அரை சதங்களுடன் எம்.எஸ்.தோனியின் அந்த சாதனையை சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு போட்டியில் அவர் விக்கெட் கீப்பராக அரை சதம் பூர்த்தி செய்தால், தோனியின் இந்த சாதனையை முறியடிக்கலாம் என்று ஐபிஎல் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விக்கெட் கீப்பராக அதிக 50+ ஸ்கோர் அடித்தவர்கள் :
24 – கே.எல்.ராகுல்
24 – எம்எஸ் தோனி
22 – குயின்டன் டி காக்
19 – தினேஷ் கார்த்திக்
18 – ராபின் உத்தப்பா