இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள விவகாரம் : ஆளுநர் பதவி விலகுவாரா?
தனது ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு தான் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று (26.03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, மறுபரிசீலனை போன்ற காரணங்களால் நான் வெளியேறமாட்டேன் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பு. ஆமாம்.அதை நான் செய்தேன். அதனால் நான் வெளியேறுவதற்கு இதை ஒரு காரணமாக பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)