பிரான்ஸில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் பொலிஸார்!
ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில், போதைப்பொருள் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பொலிஸ் பிரிவுகள் சோதனைகளை நடத்தியதாகவும், வடக்கு நகரமான லில்லில் பல கைதுகளை மேற்கொண்டதாகவும், வில்லெனுவேவ்-டி’ஸ்கே மற்றும் ரூபாய்க்ஸ் ஆகிய பகுதிகளில் பல கைதுகளை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்புடைய குற்றச் செயல்கள் மீதான பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இது போன்ற கைது நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)