பிரேசிலில் புயல் தாக்கத்தினால் பலர் உயிரிழப்பு!
பிரேசிலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் மலைப் பகுதிகளில், மீட்பு பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஏறக்குறைய எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்டை மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோ குறைந்தது நான்கு பேர் இறந்ததையும் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய சுற்றுச்சூழல் அவலங்கள் “காலநிலை மாற்றத்துடன் தீவிரமடைந்து வருகின்றன” என்று ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் டிவெள்ள சேதத்தை பாதுகாக்க, தடுக்க மற்றும் சரிசெய்ய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)