பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட பகுதியாக பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது தான் அதற்குக் காரணமாகும்.
இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா கினியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவில் அம்புண்டி என்ற பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. அதாவது அம்புண்டியில் வடகிழக்கு பகுதியில் 32 கி.மீ. தொலைவில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.