இலங்கை கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டி வித்யார்த்த வித்தியாலயத்தின் புதிய கிரிக்கட் மைதானத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிலர் கூறுவது போன்று கல்வியை தனியார் மயமாக்குவதற்கு தமது அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது எனவும், கல்வி சீர்திருத்தங்களை ஒரேயடியாக மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)