லண்டன் மற்றும் வொஷிங்டனுக்கு இடையில் கையெழுத்தாகவுள்ள முக்கிய ஒப்பந்தம்!
லண்டன் மற்றும் வொஷிங்டனுக்கு இடையில் AUKUS அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் AUKUS ஒப்பந்தத்தின் கீழ், சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ளும் முயற்சியில் மூன்று நீண்டகால நட்பு நாடுகளும் கூட்டாக தங்கள் இராணுவ வலிமையை அதிகரிக்க உறுதியளித்துள்ளன.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ், ” மூன்று அரசாங்கங்களும் இதைச் செய்வதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“இது நடக்கும், அது நடக்க வேண்டும்,” என்று வலியுறுத்திய அவர், AUKUS மற்றும் அதன் மையத் திட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.