சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் நாளை (22) ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) நியமிக்கப்பட்டுள்ளார்.
தோனி அணியில் முக்கிய வீரராக செயற்பட உள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 52 IPL போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த சில சீசன்களில், கெய்க்வாட் துடுப்பாட்டத்தில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தார். தோனியின் விலகலுக்கு பிறகு அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என கருதப்பட்டவர்.
(Visited 31 times, 1 visits today)