இயக்குநர் ராஜமவுலிக்கு சப்ரைஸ் கிப்ட் கோடுத்து அசத்திய ஜப்பானிய மூதாட்டி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘RRR’ திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்து பாராட்டிய 83 வயது மூதாட்டி, இயக்குநர் ராஜமவுலிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்து ஆச்சர்யபடுத்தினார்.
பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ 1, 2 படங்களின் மூலம் பான் இந்தியா இயக்குநராக மாறினார் ராஜமவுலி. ஹாலிவுட்டுக்கு நிகரான பிரம்மாண்ட படங்களை இந்திய சினிமாவிலும் எடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டினார். இதையடுத்து, ராம்சரண், என்டிஆர் நடிப்பில் சுதந்திர போராட்ட வரலாற்று கதைக்களத்தில் ‘RRR’ எனும் படத்தை இயக்கினார் ராஜமவுலி . இப்படம் கடந்தாண்டு மார்ச் 25ம் திகதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகி ரூ.1,150 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. முக்கியமாக அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு எனும் பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது.
இந்நிலையில், ‘RRR’ திரைப்படம் இன்று ஜப்பானில் வெளியானது. முன்னதாக இப்படத்திற்கான முன்பதிவு கடந்த 13ம் திகதி தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து விக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள திரையரங்கில் ‘RRR’ திரையிடப்பட்டது. இதில் இயக்குநர் ராஜமவுலி தனது மனைவியுடன் பங்கேற்றார். அங்கு பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, 83 வயது மூதாட்டி ஒருவர், ராஜமவுலிக்கு கூம்பு வடிவ பொருளை பரிசளித்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,”ஜப்பானில் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்பதாக ஓரிகமி கிரேன்களை பரிசாக அளிக்கிறார்கள். ‘RRR’ படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசிர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு இது” என்று குறிப்பிட்டுள்ளார்.