புட்டினுக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து – அமைதி காக்கும் மேற்கத்திய நாடுகள்
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புட்டினுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவற்றில், ஆசியாவில் இருந்து பல நாடுகள் முக்கியமானவையாகும்.
அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வெற்றியை உறுதி செய்த ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புட்டினின் வெற்றிக்கு ஈரான் மற்றும் வடகொரியா தலைவர்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், ரஷ்யாவின் நெருங்கிய நாடுகளான பெலாரஸ், கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகளின் தலைவர்களும் புடினுக்கு போன் செய்து வாழ்த்துச் சேர்த்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தல் நியாயமானதும் பக்கச்சார்பற்றதுமான செயற்பாடு அல்ல என அவர்கள் கூறுகின்றனர். புட்டினுக்கு வாழ்த்து தெரிவிக்க பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தயாராக இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.