அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்த நைஜர்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அந்த நாட்டின் ராணுவம் அவரை சிறைபிடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் நைஜரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது.
இதன்பின்னர் அங்கே அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக நைஜர் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ படைகளும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
(Visited 20 times, 1 visits today)





