ஐரோப்பா

அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்: புதின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் நேட்டோ படைகள் ரஷ்யாவுடன் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் உருவாகும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை என்று எண்ணுகிறேன்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின், 88 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 3வது முறையாக அதிபரான புதின் நாட்டு மக்களிடையே வெற்றி உரையாற்றியுள்ளார்.

அப்போது, “வெற்றிக்குக் காரணமான ஊழியர்களுக்கு நன்றி. மீண்டும் ரஷ்யாவில் எங்களின் ஆட்சி அமைக்கப்படுவதால், நாடு மேலும் வலுப்பெறும். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை ஒப்புக்கொண்டு மீண்டும் எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி. நவீன உலகில் எல்லாம் சாத்தியம் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவின் நேட்டோ படைகள் ரஷ்யாவுடன் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் உருவாகும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை என்று எண்ணுகிறேன்” என்று பேசியுள்ளார்.ஏற்கெனவே ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் காரணமாக பொருளாதார ரீதியிலான பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கோவிட் பெரும்தொற்றின் தாக்கும் தனிவதற்குள் போர் தீவிரமடைந்தது. இதனால், ரஷ்யா – உக்ரைன் மட்டும் இல்லாமல் உலக நாடுகளும் கடும் சிரமத்துக்குள்ளாகின.

வர்த்தகம், நாடுகளுக்கிடையேயான உறவு போன்றவற்றுடன் பல லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடந்தனர். இந்நிலையில், ரஷ்யாவில் தேர்தல் தொடங்கியதும் உக்ரைன் அந்த நாட்டின் மீதான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உக்ரைனையும் அதற்கு உதவும் அமெரிக்கா நேட்டோ படையையும் குறிப்பிட்டு புதின் தனது வெற்றி உரையில் பேசியுள்ளார்.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்