WPL Final – பெங்களூரு அணிக்கு 114 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
2-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா- மெக் லானிங் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை டெல்லி அணி குவித்தது. இதனையடுத்து பிரேக் விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடிய டெல்லி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
8-வது ஓவரை வீசிய சோஃபி மோலினக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷஃபாலி வர்மா 44, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 0, ஆலிஸ் கேப்ஸி 0 என ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகளை இழந்ததால் பொறுப்புடன் ஆடிய மெக் லானிங் 23 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த மரிசான் கேப் 8, ஜெஸ் ஜோனாசென் 3, மின்னு மணி 5, ராதா 12 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில் டெல்லி அணி 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.
ஆர்சிபி அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்