மலேசியாவில் திடீர் சுற்றி வளைப்பு : இலங்கையர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!
மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 158 பேர் மலேசியாவில் தங்குவதற்கு உரிய விசா இன்றி தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 83 ஆண்கள், 54 பெண்கள், 08 சிறுவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையர்களைத் தவிர, இந்தோனேசியா, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.