இலங்கையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய 20 பேருக்கு நேர்ந்த கதி
கண்டி நகர எல்லையில் சட்டவிரோதமான முறையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய 20 பேருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபை இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூகத்தில் உயர்தர தொழில்துறைகளில் ஈடுபடுபவர்களே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் குப்பைகளை போடுவதாகவும் இவ்வாறு அவர்கள் வாகனங்களில் வந்து முறையற்ற வகையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுகின்ற காட்சிகளை பொலிஸாரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டதாகவும் கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் உள்ள கொஹாகொட குப்பை பி\மேட்டில் பொருத்தப்பட்டுள்ள புதிய இயந்திரத்தினால் பிரிக்கப்படாத குப்பைகளை அனுப்ப முடியாது எனவும் மேலும் அவ்வப்போது அகற்றப்படும் குப்பைகளை, நகராட்சி ஊழியர்கள் மீண்டும் பிரிக்க வேண்டியுள்ளது இப் பணிகள் மிகவும் கஷ்டமான தொரு பணியாக உள்ளதனால் பணியாளர்கள் குப்பைகளை எடுப்பதில் ஆர்வம் காட்டுவது மிகவும்குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்து தருமாறு கண்டி மாநகர சபையினால் எத்தனை முறை தெரிவித்தும், ஒரு சிலரே இவ்வாறு செய்கிறார்கள் என்றும், இதனால் அனைத்து மக்களும் அசெளகரியம் உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் சட்டவிரோதமாக பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் பெரும்பாலும் கார்களில் வருபவர்களால் மேற்கொள்ளப் படுவதாகவும், சிசிடிவி கமராக்களை பயன்படுத்தி அவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.