சிங்கப்பூரில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மனிதவள அமைச்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் நிறுவனங்களுக்கு இடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
அதன்படி, சுமார் 32.6 சதவீத நிறுவனங்கள் 2024 இன் முதல் மூன்று மாதங்களில் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தைக் கொண்டுள்ளன.
2023 செப்டம்பர் மாதத்தில், இது 18 சதவீதமாக இருந்தது. அதே போல, சுமார் 47.7 சதவீத நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன.
இது 2023 செப்டம்பர் மாதத்தில், 42.8 சதவீதமாக இருந்தது. கடந்த 2023 ஆண்டு வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோருக்கு வேலை கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக கட்டுமானம், உற்பத்தி, நிதித் துறை போன்ற வேலைகளில் அதிக வெளிநாட்டு ஊழியர்கள் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆறு காலாண்டுகள் சரிவுக்குப் பிறகு, 2023 டிசம்பரில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 79,800 ஆக சற்று அதிகரித்தது..