இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்க்ப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய Towhid Hridoy 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
Soumya Sarkar 68 ஓட்டங்களையும், அணித்தலைவர் Najmul Hossain Shanto 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் வனிந்த ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும் மற்றும் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதன்படி, 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 114 ஓட்டங்களையும், அசலங்க 91 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் Shoriful Islam மற்றும் Taskin Ahmed ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன.