மட்டக்களப்பு – கல்முனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் யுக்திய நடவடிக்கையின் கீழ் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகள், உள்ளிட்ட வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பயணிகள் இறக்கப்பட்டு மோப்பநாய்களுடன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருளை சுற்றிவளைப்புக்களைத் தொடர்ந்து களுதாவளையிலும் இந்த யுக்திய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொலிசாரால் போதைப்பொருள் தடுப்பதற்கான, இஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 24 times, 1 visits today)