இலங்கையில் மருந்தகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இக்குண்டு தாக்குதல் நேற்றிரவு 7.00 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் உயிர்ச்சேதங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் இடம் மாத்திரமே சேதமாகிவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
காலை 8 மணி தொடக்கம் 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும் குறித்த வைத்தியசாலைக்கு
07 மணியளவில் பெட்ரோல் குண்டு தாக்குதல் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 20 times, 1 visits today)