அஜித்தை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்த விஜய்

நடிகர் அஜித் நேற்று முன் தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், “கடந்த 2 நாள்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீகம் இருந்ததால் சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு ஓய்வில் இருந்த நடிகர் அஜித் இன்று அதிகாலை வீடு திரும்பினார்.
இந்த நிலையில், அஜித்தை தொலைபேசியில் அழைத்து நடிகர் விஜய் நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 27 times, 1 visits today)