மிகப் பெரிய நஷ்டத்திற்கு பிறகு 143 மில்லியன் வருவாயை ஈட்டிய விமான நிறுவனம்!
அபுதாபியை தளமாகக் கொண்ட எதிஹாட் ஏர்வேஸ் கடந்த ஆண்டு $143 மில்லியன் லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது.
இது குறுகிய லாபத்தை தூண்டுவதாக பயணிகளின் அதிகரிப்பை மேற்கோளிட்டுள்ளது. இந்த லாபம் சிறியதாக இருந்தாலும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியதாக பார்க்கப்படுகிறது.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனமானது ஏனைய விமான நிறுவனங்களை போலவே கொரோனா தொற்று காலத்தில் மிகப் பெரிய இழப்பை சந்தித்தது.
இந்நிலையில் குறித்த நிறுவனமானது 2022 இல் $4.9 பில்லியனையும், 2023 இல் $5.5 பில்லியனையும் வருவாயாக பெற்றது.
2022 இல் 25 மில்லியனை மாத்திரமே வருமானமாக ஈட்டிய நிலையில், தற்போது அதிகளவிலான லாபத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





