ஒரு மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா – வெளியான காரணம்

பல்வேறு நாடுகளில் சுமார் ஒருமணிநேரம் பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் முடங்கியதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என தெரியவந்துள்ளது.
சில இடங்களில் 2 மணி நேரம் வரை செயல்படாத நிலையில், தங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதோ என்று பதிவர்கள் கருதினர்.
இந்தியாவிலும் சுமார் இரவு 8.30 மணி முதல் பேஸ்புக், இன்ஸ்டா ஆகியவை முடங்கின.
ஆனால் பிரச்சினையை உடனடியாக சரி செய்துவிட்டதாக மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆன்டி ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
(Visited 23 times, 1 visits today)