கொழும்பில் Google Maps பயன்படுத்தியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரி மாளிகைக்கு அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மென்பொருள் பெறியிலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிகம் தொடர்பில் பணிபுரியும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி தங்குமிடத்திற்கு செல்ல முயற்சித்துள்ளனர்.
முஹந்திரம் வீதியில் உள்ள விடுதிக்கு சென்றுக் கொண்டிருந்த போது அலரி மாளிக்கை மதிலுடன் கூகுள் வரைபடத்தில் வீதி முடிவடைந்துள்ளது.
இதனால் இருவரும் மதில் மீது ஏறி அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவியவந்துள்ளது.
வீதி ஆலய கட்டிட சுவருக்கு அருகில் சென்றபோது சந்தேக நபர்கள் இருவரும் குதித்துள்ளனர். மதில் சுவர் மற்றும் கோவில் மைதானத்திற்குள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்போது, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You sent