கருகலைப்பை சட்டபூர்வமாக்குமா பிரான்ஸ்? – நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம்!
பிரஞ்சு சட்டமியற்றுபவர்கள் இன்று (04.03) கருகலைப்பு உரிமைக்காக குரல் எழுப்புவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸின் நாடாளுமன்றமானது இன்று (4.03) பிற்பகல் வெர்சாய்ஸில் கூடவுள்ளது. இதன்போது இது தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
வலதுசாரி செனட்டில் ஆரம்ப எதிர்ப்பை முறியடித்த பிறகு, மாற்றத்திற்குத் தேவையான ஐந்தில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையைக் கண்டறிய வேண்டும்.
ஒருவேளை இந்த சட்டமூலத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்தால் உலகில் கருகலைப்பு உரிமையை பாதுகாக்கும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த ஆண்டு கருக்கலைப்பைச் சேர்ப்பதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)