அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் நியமனம்

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்திரி ரகுராமை அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்திரி ரகுராம் அவர்கள் (நடிகை மற்றும் நடன இயக்குநர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)