ஜனாதிபதியின் வீட்டுக்குள் புகுந்த திருடியவர்களுக்கு தண்டனை
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் புகுந்து அதிலிருந்த பொருட்களை திருடிய இருவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து போத்தலில் அடைக்கப்பட்ட பாய்மரக் கப்பலின் மாதிரி ஒன்று ஆம்பில்லவத்தை வீதியில் வசிக்கும் ஒருவரால் திருடப்பட்டதுடன், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இன்று (01) தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி, அந்த நபரின் 6 மாத கடுங்காவல் தண்டனை 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அன்றைய தினம், ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்தில் மெட்டல் ஹேக் ஒன்றை திருடிய பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஒரு வருட கடூழிய வேலையுடன் கூடிய 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1,500 அபராதமும், அதை செலுத்தாவிட்டால், ஒரு மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.