பிரித்தானியாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள் தொடர்பில் இளவரசர் வில்லியம் கேள்வி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் இன்று லண்டன் ஜெப ஆலயத்திற்குச் வருகை தந்ததுடன் யூத எதிர்ப்பின் எழுச்சியைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
“இன்று காலையில் நீங்கள் பேசிய யூத விரோதம் அதிகரித்து வருவதைப் பற்றி கேத்தரின் மற்றும் நானும் மிகவும் கவலைப்படுகிறோம், உங்களில் யாராவது அதை அனுபவிக்க நேர்ந்தால் நான் மிகவும் வருந்துகிறேன்,” என்று இளவரசர் கூறினார்.
வெஸ்டர்ன் மார்பிள் ஆர்ச் ஜெப ஆலயத்திற்கு தனது விஜயத்தின் போது, கிப்பா, பாரம்பரிய யூத தொப்பி அணிந்திருந்த இளவரசர், ஹோலோகாஸ்டில் இருந்து தப்பியவர்களைச் சந்தித்து, யூத மாணவர்கள் கொலை மிரட்டல்கள் உட்பட, யூத எதிர்ப்பில் “வெடிப்பு” என்று ஒருவர் விவரித்தமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்
மேலும், அடுத்த நான்கு ஆண்டுகளில் யூத சமூகங்களை யூத எதிர்ப்புக்கு எதிராகப் பாதுகாக்க 54 மில்லியன் பவுண்டுகள் புதிய நிதியுதவியை பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
அக்டோபரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் வெடித்த பிறகு பிரிட்டன் ஆயிரக்கணக்கான யூத எதிர்ப்பு சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் யூத ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது.