ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தற்போதை நெருக்கடி நிலைக்கு அரசியல் தலையீடுகளே காரணம்!
அரசியல் தலையீடுகள் காரணமாக விமானக் கொள்வனவு இரத்துச் செய்யப்பட்டமையினால் விமான நிறுவனம் தற்போதைய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக விமான சேவையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளன.
இதன்படி தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் 24 விமானங்கள் உள்ளதாகவும் அதில் 18 விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்ற விமானங்களின் என்ஜின்களில் பிரச்சினையுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பொதுவான பிரச்சினை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் விமான சேவைகளில் பாதிப்பானது பெருமளவில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.