Android பயனர்களுக்கு விசேட எச்சரிக்கை – தகவல் திருடப்படும் அபாயம்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்த கூடிய புதிய மால்வேர் பிரச்சனையை கூகுள் எதிர்கொண்டு வருகிறது, இதனால் நமது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு போனில் தொடர்ந்து பல ஆண்டுகளாக, மால்வேர் அச்சுறுத்தல் பிரச்சனைகள் இருந்து வருகிறது.
அதிகபடியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் இவ்வாறு நடக்கிறது. ஆண்டிராய்டு பயனர்கள் பலரும் கூகுள் குரோம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய வைரஸ் ஆனது குரோமில் புகுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி குரோமில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு எக்ஸ்லோடர் மால்வேர் என்ற வைரஸின் புதிய வடிவமான இது, பயனர்களின் விவரங்களை திருடுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த வைரஸ் குரோமில் இருந்து பயனர்களுக்கு வரும் எஸ்எம்எஸ் செய்திகளுக்கான அணுகலை பெற்று அதனை தனியாக ஸ்டார் செய்கிறது. சில பயனர்கள் கூகுள் குரோமை இணையத்தில் இருந்து ஆப் மூலம் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்கின்றனர்.
இதற்கான பக்கத்தை இணையத்தில் திறக்கும் போது இந்த வைரஸ் குரோம் மூலம் ஆண்ட்ராய்டு போனில் நுழைகிறது. இதன் பிறகு பயனர்களின் டேட்டாவை திருடுகிறது. ஆண்ட்ராய்டில் பிளேஸ்டார் தவிர பிற மூலங்களிலிருந்து ஆப்ஸை நிறுவினால் சில சமயம் அதிக ரிஸ்க் என்று காட்டும். இந்த வைரஸ் ஆனது பயனர்களுக்கு வரும் எஸ்எம்எஸ்-களுக்கான அணுகலைப் பெறுகிறது.
இதன் மூலம் ஹேக்கர்கள் பயனர்களின் கடவுச்சொற்கள், புகைப்படங்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் அவர்களை பற்றி தனிப்பட்ட விவரங்கள் போன்ற தகவல்களைத் திருட முடியும். இந்த சமீபத்திய அச்சுறுத்தல் குறித்து McAfee ஏற்கனவே Googleக்கு தகவல் கொடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் உடனடியாக இதற்கான தீர்வை பெற்று வருகிறது.
ப்ளே ஸ்டோரை தாண்டி மற்ற ஆப்ஸை நிறுவ வேண்டாம் என்று பயனர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே கொடுக்க முடியுமே தவிர, பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கூகுளால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பலியாகாமல் பாதுகாக்கவும், இந்த ஹேக்கர்களிடம் இருந்து நமது தகவல்கல் திருட படமால் இருப்பதை உறுதி செய்யவும் மொபைலில் Play Protect நிறுவுமாறு பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் கூறி உள்ளது.