அயோத்தி ராமர் கோவிலில் முதல் மாத்திலே கோடிக்கணக்கில் வருமானம்! எவ்வளவு தெரியுமா?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
அவர்கள் காணிக்கை, நன்கொடைகளை வாரி வழங்கி நிலையில் தான் ஒரு மாதத்தில் ராமர் கோவிலுக்கு கிடைத்த தங்க நகை மற்றும் காணிக்கை பணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது: கடந்த மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பிறகு ஜனவரி 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் திறந்து ஒருமாதம் ஆன நிலையில் ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
25 கிலோ தங்கம், வெள்ளி நகைகள், கோவில் அலுவலகத்தில் வழங்கப்பட்ட காசோலை, கோவில் உண்டியல் கிடைத்த காணிக்கை என மொத்தம் ரூ.25 கோடி கிடைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்துள்ளனர்.
இதில் சிறப்பு என்னவென்றால் ராமர் பக்தர்கள் தங்களின் பக்தி காரணமாக கோவிலில் பயன்படுத்த முடியாத வெள்ளி, தங்க நகைகளை பால ராமருக்கு நன்கொடையாக அளிக்கிறார்கள். இந்த நகைகளும் பக்தர்களின் பக்திக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மேலும் அயோத்தியில் ராமநவமி பண்டிகை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிரிக்கும். மேலும் நன்கொடையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ராமர் கோவில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கோவிலில் ரசீதுகள் வழங்க 12 கணினிமயமாக்கப்பட்ட கவுண்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக கோவிலில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.