அமெரிக்க விமானப்படை வீரரின் மரணத்திற்கு பைடன் நிர்வாகம் பொறுப்பு: ஹமாஸ்

இஸ்ரேலிய தூதரகத்தின் முன் தன்னைத்தானே தீக்குளித்துக்கொண்ட அமெரிக்க விமானப்படை வீரரின் மரணத்திற்கு பைடன் நிர்வாகமே பொறுப்பு என்று பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுவான ஹமாஸ் தெரிவித்துள்ளது.
புஷ்னெலின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது இரங்கலையும் முழு ஒற்றுமையையும் தெரிவித்துள்ள ஹமாஸ், பாலஸ்தீன மக்களின் நினைவாக அவர் “அழியாமல் இருப்பார்” என்றார்.
முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் போரை எதிர்த்தும், தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புஷ்னெல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இஸ்ரேலிய தூதரகத்தின் முன் தீக்குளித்து இறந்தார்.
(Visited 15 times, 1 visits today)