ரஷ்ய சிறப்புப் படைகளின் தாக்கும் திறனை மேம்படுத்துவதாக புடின் சபதம்
ஷ்யாவின் சிறப்பு நடவடிக்கைப் படைகளின் இயக்கம் மற்றும் தாக்கும் திறனை அதிகரிக்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் இராணுவத்தை பலப்படுத்துவதற்கு இது ஒரு முக்கிய முன்னுரிமை என்று கூறியுள்ளார்.
மேலும் புதிய தலைமுறை ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் அவர்களுக்கு ஆயுதம் கொடுங்கள்” என்று புடின், ரஷ்யாவில் பிப்ரவரி 27 சிறப்பு நடவடிக்கை படை தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.
“இராணுவம் மற்றும் கடற்படையின் நீண்டகால வளர்ச்சிக்கான முக்கிய முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று என்பதை தான் வலியுறுத்துவதாக புடின் தெரிவித்திட்டுள்ளார்.
சிறப்புப் படைகள் கடந்த தசாப்தத்தில் சிரியாவில் ரஷ்யாவின் இரகசிய நடவடிக்கைகளிலும், 2022 முதல் உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பிலும் ஈடுபட்டுள்ளன, இதை புடின் “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று அழைத்தார்.