விரைவில் போர் நிறுத்தம் – பைடன் அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அடுத்த வாரத் தொடக்கத்திற்குள் புதிய போர் நிறுத்தம் நடப்பிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
நேற்று நியூயார்க் சென்றபோது அவர் அதனைச் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை எட்டும் இறுதிக்கட்டத்திற்கு நெருங்கியிருப்பதாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தம்மிடம் கூறியதாக பைடன் கூறினார்.
(Visited 12 times, 1 visits today)