தென்னாப்பிரிக்காவின் தலைநகரில் தாங்கிக் கொள்ள முடியாத துர்நாற்றம் – நெருக்கடியில் மக்கள்
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தாங்கிக் கொள்ள முடியாத அளவு துர்நாற்றம் வீசுவதாக தெரியவந்துள்ளது.
எனினும் இதற்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
சாக்கடைகளிலிருந்து ஏதாவது கசிந்திருக்குமோ என்று எண்ணி, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
துர்நாற்றம் அங்கிருந்து வரவில்லை என்பதை அவர்கள் உறுதிசெய்தினர். துர்நாற்றம் துறைமுகத்தில் அணைந்திருந்த ஒரு கப்பலிலிருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.
பிரேசிலிலிருந்து வந்த கப்பலில் 19,000 கால்நடைகள் இருந்தன.
கப்பலில் கால்நடைகள் மிக மோசமான நிலையில் இருந்திருக்கக்கூடும் என்று விலங்குநலச் சங்கங்கள் சந்தேகிக்கின்றன.
பிரேசிலில் தொடங்கிய 2 வாரப் பயணத்தில் விலங்குகளின் கழிவுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்திருக்கலாம் என்று அவை கூறின.
விலங்குநல மருத்துவ ஆலோசகர் ஒருவர் கப்பலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.