ஐரோப்பா

பிரான்சில் வெடித்த மாபெரும் போராட்டம்! கடும் நெருக்கடியில் பொலிஸார்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் வருடாந்திர விவசாய கண்காட்சியை விவசாயிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளை கண்காட்சிக்குள் நுழைய விடாமல் தடுக்க பிரெஞ்சு பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

விவசாயிகளின் வருமானக் குறைப்பு, பருவநிலை மாற்றம், விவசாயத் துறையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஆதரவு அளிக்கக் கோரி, பிரான்சில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாரிஸ் விவசாய கண்காட்சி பிரான்சில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

09 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 06 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!