குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும் உணவுகள்!
ஞாபக சக்தி என்பது அனைத்து வயதினருக்குமே மிகத் தேவையான ஒன்று. குறிப்பாக படிக்கும் குழந்தைகளுக்கும் வேலை செய்பவர்களுக்கும் அதிக தேவை உள்ளது. நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் மூளையின் செயல் திறனை குறைக்கும் உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
சிட்ரஸ் பல வகைகள்:
சிட்ரஸ் பழங்களான நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிளேவனாய்ட்ஸ் மூளையின் நியூரான் செல்களை பாதுகாத்து நல்ல நினைவாற்றலை தூண்டுகிறது.
புரதச்சத்து:
புரதச்சத்து நிறைந்த உணவுகளான பால்,சீம்பால் ,சாக்லேட் , முட்டை, மாமிசம், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் அதுவும் குறிப்பாக வால்நட் அல்லது வேர்க்கடலை. தினமும் படிக்கும் குழந்தைகள் கடலை மிட்டாய் 1 எடுத்துக் கொள்வது மூளையின் செயல் திறனுக்கும் நல்லது அதில் இரும்பு சத்தும் உள்ளது .
பீட்ரூட்:
பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக இருப்பதால் இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது என பல ஆய்வுகளிலும் கூறப்படுகிறது.
காய்கறிகள்:
சிவப்பு ,ஆரஞ்சு, பச்சை நிற காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர்:
மனித உடலில் சராசரியாக 70 சதவீதம் தண்ணீர் உள்ளது ,ஆனால் ஒரு சில சமயங்களில் நாம் நீர் அருந்த மறந்து விடுகிறோம் இதனால் கூட நமக்கு பதட்டம் டென்ஷன் போன்றவற்றை ஏற்படுத்த காரணமாய் இருக்கிறது. அதனால் அவ்வப்போது நீரை எடுத்துக் கொள்ள வேண்டும் இது மூளையில் டென்ஷன் வருவதை குறைக்கும்.
காபி:
பல ஆய்வுகளிலும் காபி குடிப்பது மிக நல்லது என கூறுகின்றனர், ஏனெனில் இதில் உள்ள காஃபைன் மூளையில் கவனிக்கும் திறனை அதிகரிக்க செய்கிறது .ஆனால் இதை காலை நேரம் குறைந்த அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மதியத்திற்குப் பிறகு தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் காபியில் உள்ள கஃபைன் நம் உடலில் 10:00 மணி நேரம் வரை இருக்கும் இதனால் இரவு தூக்கம் பாதிக்கப்படும்.
மூளையின் செயல் திறனை குறைக்கும் உணவுகள்
தேர்வு சமயங்களில் சர்க்கரை, ஐஸ்கிரீம் போன்ற ஸ்வீட் வகைகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடனடி எனர்ஜியை கொடுத்து அதை உடனடியாக எனர்ஜியை குறைக்கவும் செய்யும், இதனால் டயட்னஸ் ஏற்படும். அது மட்டுமல்லாமல் சிப்ஸ் வகைகளை அறவே தவிர்ப்பது நல்லது. டிரான்ஸ் பேட் அதாவது நிறைவுறா கொழுப்புகளால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். பல எண்ணெய்களில் கலந்து பொறித்த உணவுகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடவும்.
ஆகவே படிக்கும் குழந்தைகளுக்கு தேர்வு சமயங்களில் மூளைக்கு புத்துணர்வை கொடுக்கும், மூளையின் செயல் திறனை கூட்டும் உணவுகளை கொடுத்து அவர்களின் ஞாபக சக்தியை மேம்படுத்துவோம்.