டொமினிகன் குடியரசில் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 98 பேர் பலி

டொமினிகன் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 98 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 160 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்தபோது ஏராளமானோர் அங்கு இருந்தனர்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒரு ஆளுநரும், முன்னாள் பேஸ்பால் வீரரும் அடங்குவர்.
கூரை இடிந்து விழுந்த நேரத்தில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த பிரபல பாடகர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 5 times, 1 visits today)