பலுசிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 9 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்
பாகிஸ்தானின் பதற்றமான தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் ஒன்பது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாஷுக் மாவட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர், தீவிரவாதிகள் ஒரு காவல் நிலையம் மற்றும் எல்லைப் படை வளாகத்தைத் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“பதில் அளிக்கச் செல்லும் வழியில் இராணுவம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. பயங்கரவாதிகள் ஒன்பது வீரர்களைக் கொன்றனர்,” என்று தெரிவித்தார்.





