சீனாவில் உயிரிழந்த மகனின் காதலியை திருமணம் செய்த 86 வயது முதியவர்

சீனாவில் உயிரிழந்த மகனின் காதலியை 86 வயது முதியவர் திருமணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதனால் ஆத்திரமடைந்த முதியவரின் மகள் அவருடைய வீட்டில் இருந்த பொருட்களை உடைத்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் முதியவரின் மனைவி காலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு அவரது மகன் தமது 53 வயது காதலி வாங்கை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மூவரும் ஒன்றாக வசித்து வந்தனர். வாங் முதியவரையும் அவரது மகனையும் நன்கு கவனித்து வந்தார்.
பெப்ரவரி மாதம் கல்லீரல் பாதிப்பால் முதியவரின் மகன் உயிரிழந்துள்ளார். பின்னர் கடந்த மாதம் 12ஆம் திதி முதியவர் வாங்கைப் பதிவுத்திருமணம் செய்துகொண்டார்.
வாங் தமது தந்தையின் சொத்திற்காகத்தான் அவரை திருமணம் செய்ததாக மகள் குற்றஞ்சாட்டினார்.
அதனால் தாயாரின் பெயரில் இருந்த சொத்துகளைத் தந்தையின் பெயருக்கு மாற்ற மகள் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் வாங் முதியவரின் சொத்தின் மீது தமக்கு நாட்டம் என்றும் இருந்ததில்லை என்றார்.
அவர் மீது இருந்த அன்பாலும் அக்கறையாலும் அவரை முதுமைக் காலத்தில் பார்த்துக்கொள்வதற்காகவே திருமணம் செய்ததாய் அவர் கூறியுள்ளார்.