சூரத்தில் காத்தாடி நூல் சிக்கி 8 வயது சிறுவன் பலி
குஜராத்தின்(Gujarat) சூரத்(Surat), சைக்கிள் ஓட்டிச் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தில் காத்தாடியின்நூல் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ரெஹான்ஷ் போர்ஸ்(Rehansh Pors) என அடையாளம் காணப்பட்ட சிறுவன், மற்றொரு குழந்தையுடன் கட்டிட வளாகத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கழுத்தில் நூல் வெட்டி உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் காத்தாடியின் நூல் தொடர்பான தொடர் மரணங்களின் சமீபத்திய சம்பவம் இதுவாகும்.
இதற்கு முன்னதாக கர்நாடகாவின்(Karnataka) பிதர்(Bidar) மாவட்டத்தில் 48 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காத்தாடியின் நூலில் சிக்கி படுகாயமடைந்து இறந்துள்ளார்.
இதே போல், சூரத்தில் காத்தாடியின் நூல் காரணமாக 70 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்தி
குஜராத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம்





